எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

"துடிப்பான குடிமகன் - வெற்றி பெற்ற தேசம்" எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு மாவட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது.

விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமைதாங்கி நடாத்தியிருந்தார்.

குறித்த உடற்பயிற்சி நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.ஆதம்லெப்பை அவர்களும் உடற்கல்வி ஆசிரியர்
ரீ.கஜேந்தினி, விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஜீ.ஆர்.கிறிஷானியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிநடாத்தியதுடன், உத்தியோகத்தர்கள் இதன்போது ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், இதன் தொடர் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours