சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மூதுர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு
உட்பட்ட முன்னம்போடிவெட்டை கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மாலை
நேரவகுப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகாரணகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்
பாடசாலைக்கான அலுமாரி வழங்கி வைக்கும் நிகழ்வும் சுவிஸ் உதயம் அமைப்பின்
கிழக்கு கிளையின் தலைவர் திரு. மு. விமலநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை
இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கப்
பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம், செயலாளர் அக்கரைப்பக்கியன், பொருளாளர்
ம.கருஸ்ராஜ், உபசெயலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர்களான இ.ஜீவராஜ் (அதிபர்
), கண்ணன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். இந்த நிகழ்வுக்கான நிதி
அனுசரனையினை தாய்ச்சங்கத் தலைவர் சுதர்சன் அவர்களது பிள்ளைகளான தர்ஷன்,
தர்ஷினி ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது







Post A Comment:
0 comments so far,add yours