சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் சிங்களப்பாட ஆசிரியையாகக் கடமையாற்றி தனது 34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி எஸ்.எம்.கமால் சுல்பிக்ஹா அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை அதிபர் கே.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை சிங்கள மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினை அம்பாரை பண்டாரநாயக்க வாலிகா மகாவித்தியாலயத்திலும் கற்று 1992.05.11 திகதி ஆசிரியராக கல்முனை சிங்கள மகாவித்தியாலயத்தில் முதல் நியமனத்தினைப்பெற்று பின்னர் நற்பட்டிமுனை அல் அக்ஷாவித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும், இறுதியாக வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்திலும் கற்பித்து ஓய்வுபெற்றுள்ளார்
இவர் சுமார் 10 வருடங்கள் அட்டாளைச்சேனை தேசியக்கல்விக்கல்லூரியில் வருகைதருவிரிவுரையாளராகக் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.






















Post A Comment:
0 comments so far,add yours