( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை நேற்று (22) திங்கட்கிழமை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டலுக்கமைய   குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 சுற்றிவளைப்புத் நடவடிக்கைகளின் போது, நீண்ட காலமாக இளைஞர்களை0776993838 இலக்குவைத்து சூட்சுமமான முறையில் வியாபாரம் செய்துவந்தவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், கல்லரிச்சல் 04 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் என 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2 ஆயிரத்தி 321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும், ஒரு தொகை பணம், கையடக்கத் தொலைபேசி  வங்கி அட்டை 03 என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours