இருமாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனைபடைத்துள்ளதுடன் தோற்றிய ஆறுமாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீதம் சித்தி பெற்றுள்ளதுடன் வலயத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் சி.கணேஸ் தெரிவித்தார்.
இதில் மதியழகன் யஸ்வினி 157 புவனேஸ்வரன் டக்சிதா-153 ஆகிய புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் விக்னேஸ்வரன் கிரிதர்ஷா 127 மோகன்ராஜ் விகாஷன் 121 மதனராஜ் தக்சிமிதா 110 தங்கத்துரை கஜிஸ்கர் 74 பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியை செல்வி. நல்லதம்பி பரமேஸ்வரி அவர்களுக்கும் ஏனைய ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவியாக இருந்த வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள் மற்றும்அனைத்து தனிப்பட்ட வளவார்களுக்கும் குறிப்பாக சுயம்பு கல்வி மையத்தாருக்கும்பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் அதிபர் தெரிவித்துள்ளார்


Post A Comment:
0 comments so far,add yours