மல்லிகைத்தீவு நிருபர்
பொலனறுவையில் நடைபெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகா வித்தியாலய மாணவி மதியழகன் யோமிசாந்தினி அவர்கள் 3 ஆம் இடத்தை வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி வரலாற்றுச் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார் இச்சாதனை விளையாட்டுத் துறையில் முதலாவது தேசிய வெற்றி பெறப்பட்டுள்ளது என அதிபர் சி.கணேஷன் தெரிவித்தார்சாதனை மாணவி யோமிசாந்தினிக்கும் மாணவியை பயிற்றுவித்து வழிப்படுத்தியபிரதம பயிற்றுவிப்பாளர் உமாசுதன் அவர்களுக்கும் ஏனைய பயிற்றுவிப்பாளர்களுக்கும் எப்போதும் எமது மாணவிக்கு உறு துணையாக இருந்த Spota Academy அணியினருக்கும்விளையாட்டு ஆசிரியருக்கும் சாதனை மாணவியின்பெற்றோர்களுக்கும் மாணவிக்குத் தேவையான சில உதவிகளை வழங்கியசெல்வி. நிமலரெட்ணம் சிந்தி (பழைய மாணவியின் புதல்வி - பிரான்ஸ்)
திருமதி.ஜெ.பாக்கியநாயகி பழைய மாணவி (மல்லிகைத்தீவு)மூதுர் கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர்.ஏ.வை.எம் ஜவாத்
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அதிபர் நன்றிகளைத் தெரிவித்துள்ளதுடன்
இவரோடு பங்கு பற்றிய நான்கு மாணவிகள் திருகோணமலை சார்பில் வெற்றிப் பதக்கங்களை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours