( வி.ரி. சகாதேவராஜா)

மின்னொளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை   பொலிஸ் நிலைய கிரிக்கெட் அணியை கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வெற்றி பெற்றது.

இப் போட்டி நிகழ்ச்சி மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் நேற்று  (17) புதன்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற  பொலிஸ் அணி முதலில் களத்தடுப்பாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணியானது 12ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டத்தினை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி 65 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து சுருண்டது.

சட்டத்தரணிகள் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சட்டத்தரணி ஜெமில் ஜாவீட்  5விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியின் பிரதம அதிதியாக மேல் நீதிபதி ஜெயராமன் ரொஸ்க்கி கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான்  சாஜித் கலாம்  
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் சிரேஷ்ட சட்டத்தரணி தலைவி ஆரிக்கா காரியப்பர் மற்றும் 
சிரேஷ்ட கனிஷ்ட சட்டத்தரணிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours