(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் கீழ் சாய்ந்தமருது “அல் ஹிலால்” வீதியில் காபட் இடுகின்ற வேலை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பேரில் இன்று (03) புதன்கிழமை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வீதியானது 4.7 மில்லியன் ரூபாய் செலவில் 240 மீற்றர் நீளம் கொண்ட காபட் பாதையாக, செப்பனிடப்பட இருக்கின்றது.
இவ்வேலைத்திட்டத்தை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் உட்பட பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Post A Comment:
0 comments so far,add yours