நூருல் ஹுதா உமர்
                         
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (15) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

புதிதாக 22 வைத்தியர்கள் கல்முனை பிராந்தியத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours