எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை
ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கரையோரப்
பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் பனம் விதை நடுகை
செய்யும் நிகழ்வு இன்று (2025.09.24) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின்
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மண்முனை தென் எருவில் பற்று கடற்கரையை
அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றது.
இச்சுத்தப்படுத்தல் நிகழ்வு,
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் "கிழக்கு
கரையோரங்களை தூய்மையாக பேணுதல்" எனும் திட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக
அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மண்முனை தென் எருவில்பற்று
பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையான
கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அப்பிரதேசங்களில் ஏற்படும்
மண்ணரிப்பை தடுப்பதற்காக பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி
தரணிதரன், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், மத்திய சுற்றாடல்
அதிகார சபை சுற்றாடல் உத்தியோகத்தர், கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்,
பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை
உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours