அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபடைத்த வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 15 கிராமம் உதய தீபம் மேம்பாட்டு அமைப்பு மற்றும் 15 ஆம் கிராமம் கண்ணகியம்மன் விளாவடிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து இப்பாராட்டினை செய்தனர்
இவர்கள் பாடசாலைக்கு வியாழக்கிழமை நேரடியாக வருகைதந்து சித்தியடைந்த பி.லைஷ்ணமி-138 அ.அகர்ஷனா -162 ஜெ.அஸ்மிதா-145 சி.அபிஷயா-144 க.சபினயா-133 ச.லதுஸ்ரிகா-141 து.அக்சயா-137 ஆகிய மாணவர்களோடு கற்பித்த ஆசிரியர் பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரைப் பாராட்டினர்
இதில் கண்ணகியம்மன் ஆலயத்தலைவர் இராஜகோபால் விளாவடிப்பிள்ளையார் ஆலயத்தலைவர் சௌந்தராஜன் கண்ணகியம்மன் ஆலய செயலாளர் சாமித்தம்பி உதய தீபம் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்




Post A Comment:
0 comments so far,add yours