நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு "தலைவர் தினம்" நினைவுப் பேருரையும், கத்தமுல் குர்ஆனும், துஆப் பிரார்த்தனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் இந் நிகழ்வில் உலமாக்கள், ஹாபிழ்கள், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்தனர்.

எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் கல்முனை காரியாலயமானது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிராந்திய காரியாலயமாக இயங்கிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours