சா.நடனசபேசன்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் சின்னக் கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படும் வெள்ளை நாவற்பதி என வரலாற்றுச் சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற மூர்த்தி தலம் தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ தீர்த்த உற்சவம் எதிர்வருகின்ற 12 ஆம்திகதி வெள்ளிக்கிழமை காலை மு.ப 8மணி 5 நிமிடத்தில் இடம்பெற இருப்பதாக ஆலய பிரதம குருவும் இந்து குருமார் அமைப்பின் தலைவரும் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு வை க வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்தார்
ஆலய மகோற்சவமானது ஆவணி மாதம் 9ம் நாள் 25.08.2025 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் நடந்து வரும் இவ்வேளையில் 12ம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக இடம் பெற்றது எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவத்துடன் கொடியிறக்கமும் நடைபெற இருக்கின்றது இதற்கான அனைத்து ஓழுங்குகளையும் தலைவர் த.மகேந்திரன் மற்றும் நிர்வாகத்தினர்மேற்கொண்டுவருகின்றனர்

Post A Comment:
0 comments so far,add yours