(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


அரசாங்கத்தின் PSDG  நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களிடம்  விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, 9.5 மில்லியன் செலவில் பாலமுனை அரசடி வீதிக்கான (105மீற்றர்) கொங்ரீட் மற்றும் தடுப்புச்சுவர் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  (13) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், அட்டளைச்சேனை பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் மற்றும் அட்டளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours