சா.நடனசபேசன்
பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டுவிழாவும் அதிபர் ஆறுமுகம் மதியழகன் தலைமையில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறீதரன் மற்றும் விஷேட அதிதிகளாக பட்டிருப்பு கல்விவலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பு.திவிதரன் ஆர் ஜீவானந்தராஜா எஸ்.சுரேஸ் கே.திருச்செல்வம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அத்தோடு வலயமட்டத்தில் பல சாதனைபடைத்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆறுமுகம் மதியழகன் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
























Post A Comment:
0 comments so far,add yours