இதுவரை காலமும் தாயின் நினைவாக உருவாக்கப்பட்ட ' தடம் ' அமைப்பானது குறிப்பிட்ட பகுதிகளுக்கான சேவையாக இருந்துவந்தது இன்று இவ் அமைப்பின் சேவை நாடுதழுவியதாக இடம்பெறும் என தடம் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் இ.நிறஞ்சன் (அவுஸ்ரெலியா) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிக்கையில் எமது மக்களின் வாழ்வாதாரம், கல்வி என்பவற்றை முன்னேற்றும் நோக்கோடு அமைப்பை நிறுவி சிறிய சேவையினைச் செய்துவந்தநிலையில் அகில இலங்கை ரீதியாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .இது எனக்கும் எனது சேவைக்கும் கிடைத்த ஒரு அங்கிகாரமாகவே பார்க்கிறேன் .
ஆகவே இனிவரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு எனது கிராம மக்களுக்கும் எமது பிரதேச மக்களுக்கும் சேவை வழங்குவேன் என்பதனை மன மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் .
எமது கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு நிறுவனமாகக ' தடம் ' தடம் பதித்தது இது வரலாற்று சாதனையாகும். இவ் அமைப்பின் மூலம் நான் நாடுகடந்து வாழ்ந்தாலும் எமது மக்களையும் மண்ணையும் என்றும் மறந்துவிடமாட்டேன் தொடர்ச்சியாக எனது சேவை இடம்பெறும் என்றார்.


Post A Comment:
0 comments so far,add yours