சா.நடனசபேசன்
அம்பாரை மட்டக்களப்பு பதுளை திருகோணமலை மன்னார் மாவட்டங்களில் இயங்கிவருகின்ற அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தில் கற்று அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற மற்றும் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர் வள கல்வி நிலையத்தில் அதன் பிரதிப்பொறுப்பாளர் க.தியாகராஜா தலைமையில் 20 ஆம்திகதி சனிக்கிழமை இடம்பெற்றது
இதன்போது வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம்,வளத்தாப்பிட்டி அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம், வட்டவான் அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம் ,பதுளை அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம், மயிலந்தனை அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம், பாலமீன்மடு அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம், உன்னிச்சை அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம், கறுக்காமுனை அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம் , ஆகியவற்றில் கற்று வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றமாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் மற்றும் புத்தகப்பை ,பாதணி ,குடிநீர்ப்போத்தல் வங்கிக்கணக்கில் பணம் வைப்புச்செய்து வழங்கப்பட்டது. இதேபோன்று 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பை, பாதணி ,குடிநீர்ப்போத்தல் ,வங்கிக்கணக்கில் பணம் வைப்புச்செய்து வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ் மகேந்திரகுமார், பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன், அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் ச.பாணுதேவன் ,கல்விக்குக் கரம் கொடுப்போம் அமைப்பின் இணைப்பாளர் திருமதி .மோகனரேகா கருணாகரன் , உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை அமரர் வாசுகி அவர்களது 7 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அவர்களது பிள்ளைகளான லண்டனில் வசிக்கும் கல்விக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் சிறிக்காந், சத்தியன், சர்மிலா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















Post A Comment:
0 comments so far,add yours