எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு , நியாயமான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு செயல்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தில் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின் (MIC) ஏற்பாட்டில் இன்று (11)
இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நியுசிலாந்து தூதுவராலய உயர் அதிகாரி பிரற்சில்ட்ஸ் கலந்து கொண்டார்.
இதன் போது ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சட்டங்கள், புலம் பெயர் தொழிலாளர்களில் உரிமைகள் மனித கடத்தலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை சர்வதேச மையத்தின்புலம்பெயர் தகவல் மையத்தின் (ICMPD) சிரேஸ்ட அதிகாரி கொல்டா ரோமா அவர்களினால் வழங்கப்பட்டது.
முறையான புலம் பெயர்வு மற்றும் முறைசாரா புலம் பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பான தொளிவூட்டல்கள் இதன் போது துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நியுசிலாந்து நாட்டின் நிதி உதவியின் கீழ் இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினரினால் (ICMPD) அரச அதிகாரிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வு இடம் பெற்றன.
இந் நிகழ்வில் இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைப்பு பணியக அதிகாரிகள், இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிசார் மற்றும உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

.jpeg)
.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours