எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வவுணதீவு,
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வடகீழ் பருவகால காலநிலைக்கு
தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (24.10.2025) பிரதேச
செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதி திட்டமிடல்
பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், மண்முனை
மேற்கு பிரதேச சபை உபதவிசாளர், தேசிய அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி
உத்தியோகத்தர், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர், பொதுச் சுகாதார
பரிசோதகர், விவசாய போதனாசிரியர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், கால்நடை
வைத்திய அதிகாரி, நாவற்காடு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி, வீதி
அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ், வலயக் கல்வி
அலுவலகம், தேசிய நீர்வளங்கள் அதிகார சபை மற்றும் பலநோக்கு கூட்டுறவுச்
சங்க ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், அரச சார்பற்ற
நிறுவனமான (AU Lanka, RDPO) ஆகியவற்றின் பிரதி நிதிகள் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்
போது, வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்ததின்
போது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களின் பாதிப்புகளை
குறைப்பதற்கு தயார்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு
அதற்காக அவசர நிலையின் போது எவ்வாறு தயார் நிலையில் இருக்க வேண்டும் என
ஆராயப்பட்டது.
.jpeg)




Post A Comment:
0 comments so far,add yours