நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்கள் தனது 34வருட கால அரச சேவையில் இருந்து நேற்று (2025.10.16) ஓய்வு பெற்றுள்ளார்.

இதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சேவை நலன் பாராட்டு விழா சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16), பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ. வினோகாந்த், உறுப்பினர்கள், அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கெளரவ தவிசாளர், கெளரவ உப தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்களினால் எம்.ஏ.கிதிர் முஹம்மட் அவர்களின் 34 வருட கால அரச பணியின் உன்னத சேவைகளை சிலாகித்து உரையாற்றியதுடன், பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாவும் கையளிக்கப்பட்டன.

1991இல் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் முதல் நியமனம்பெற்று தனது சேவையை ஆரம்பித்தார். அங்கு O5 வருடங்கள் பணியாற்றியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு (MSO Supra) தேர்ச்சி பெற்றார்.

பின்னர், 1997ஆம் ஆண்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, அங்கு 14 வருடங்கள் சேவை புரிந்தார்.

2011ஆம் ஆண்டு, இடமாற்றத்தின் மூலம் நாவிதன்வெளி, இறக்காமம், நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளின் செயலாளராக கடமையாற்றினார்.
அதையடுத்து, 2017ஆம் ஆண்டு, தனது சொந்த பிரதேசமான சம்மாந்துறை பிரதேச சபையில் செயலாளராக நியமிக்கப்பட்டு, அங்கு 8 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றி 34 வருட அரச சேவையிலிருந்து தனது 60ஆவது வயதில் ஒய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours