எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் தமது விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் 77858 ஹெக்டேர் நிலத்தில் பெரிய நீர்ப்பாசன விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 7361.8 ஹெக்டேர் நிலத்தில் சிறிய நீர்பாசன விவசாயம் மற்றும் 42350.7 ஹெக்டேர் விவசாய நிலத்தில் மானாவாரி நெற்செய்கை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இம்முறை சிறுதானியங்கள் பயறு 125 ஹெக்டேர் நிலத்தில், கெளப்பி 350 ஹெக்டேர், உளுந்து 100 ஹெக்டேர் மற்றும் நிலக்கடலை 1957 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு கொள்கை திட்டத்திற்கு அமைவாக மாவட்டத்தில் ஏலவே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பயிர் செய்கை மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இம்முறை விவசாய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours