முதியோருக்கான தேசிய அலுவலகத்தின் அனுசரணையில் சர்வதேச முதியோர் தின வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வுகள் குருக்கள் மடத்தில் அமைந்துள்ள அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தின் முதியோர் இல்லத்தில் அதன் முகாமையாளர் கலாபூசணம் கா.சந்திரலிங்கம் தலைமையில் 6 ஆம்திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன் போது பூசை ஆராதனையினைத் தொடர்ந்து முதியோர்களது கலைநிகழ்வுகள் மற்றும் குருக்கள் மடம் சிவநெறிமன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களது பஜனைப் பாடல்களும் இடம்பெற்றன
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.சுகுணன் கலந்து சிறப்பித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் குணநாயகம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்










Post A Comment:
0 comments so far,add yours