பாறுக் ஷிஹான்



அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்  கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளர் அதிகார சபையினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்தில் உள்ள   குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு  அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்று  ரூபா  100,000  அபராதம் விதித்துள்ளது.

அண்மையில் அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளார் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அரசாங்க கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் குறித்த வியாபார உரிமையாளருக்கு  எதிராக அதிகார சபையின் புலானாய்வு உத்தியோகதர்கள்  வழக்குத்தாக்கல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours