ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு எம் யூ பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சர்வதேச.உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் தரம் 10,11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கு'உலக மனநல கூட்டமைப்பின் அவசியம்'எனும் தலைப்பில் நடாத்திய கட்டுரைப் போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட (கிழக்கு மாகாணம்) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவி செல்வி. பாஸ்கரன் மோஷிணி 1ஆம் இடத்தைப் பெற்று தேசியமட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார் இவரைப் பாராட்டி மாணவியை கௌரவிப்பதற்காக எம்யூபல்கலைக்கழக குழாமினர் (17) திகதி வருகைதந்து பாராட்டினர்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தேவரஞ்சினி மற்றும் கொழும்பு எம்யூ பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மர்வான் ஆகியோரால் வெற்றி பெற்ற மாணவிக்கு மாலை அணிவித்து உளவியல் விருது , சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மாணவர்களின் பங்களிப்பு மூலம் இம்மாணவியின் கற்றல் செயற்பாட்டிற்கு சிறிய பணத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.








Post A Comment:
0 comments so far,add yours