சமூகசேவகர் நிறஞ்சன் அவர்களது சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது இதனை யாரும் மறந்துவிடமுடியாது என நாடறிந்த கவிஞர் இலக்கியவான் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தெரிவித்தார்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் வாணிவிழாவினை முன்னிடடு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வுகளில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தடம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பெரியகல்லாற்றினைச் சேர்ந்த சமூகசேவகர் இ.நிறஞ்சன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 1 ஆம்திகதி அதிபர் க.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது  

தடம் அமைப்பின் தலைவர் நிறஞ்சன் அவர்களிடம் பாடசாலையின் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்ததன் காரணாமாக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில் சமூகத்திற்கு உதவிசெய்வதற்கு நல்லமனம் வேண்டும். பணம் இருந்தால் போதாது அதனை ஏழைமக்களுக்கு உதவிசெய்யக்கூடிய நல்ல மனம் இருக்கவேண்டும் இவ்வாறு நல்ல மனம் படைத்தவர்தான் சமூகசேவகர் நிறஞ்சன் இவரது சேவையினைப் பாராட்டுகின்றேன். 

தமிழர்களது கல்விவளர்ச்சியானது கடந்தகாலங்களில் பின்நோக்கிச் சென்றாலும் இன்று முன்னேற்றம் கண்டு வருவதற்கு நிறஞ்சன் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களது சேவையும் உதவிக்கொண்டிருக்கின்றது இவ்வாறு தொடர்ச்சியான சேவையினை  செய்யும் நிறஞ்சன் அவர்களைப் பாராட்டுகின்றேன்  என்றார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours