கல்முனை பாற்றிமா தேசியபாடசாலையின் 125 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு 1995 ஆம் ஆண்டு சாதாரணதரம்; 1998 ஆண்டு உயர்தரம் கற்ற மாணவர்கள்  ஒன்றிணைந்து ஒருதொகைக் கதிரைகளை கொள்வனவு செய்து அண்மையில் அப்பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் அவர்களிடம்  கையளித்தனர்.

இவ் உதவியினை செய்யுமாறு பாடசாலையின் அதிபர் மற்றும் விழாக்குழு செயலாளர் எஸ்.சிறிரங்கன் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அதேவேளை 1995 ஆண்டு சாதாரணதரம் 1998 ஆண்டு உயர்தரம் கற்ற மாணவர்களும்; ஒன்றிணைந்து அவர்களுக்கான ரீசேட்டும் அறிமுகம் செய்து வைத்தனர்

இந்த உதவியினை வழங்கிய பழையமாணவர்களுக்குப் பாடசாலையின் அதிபர் விழாக்குழுசெயலாளர் உட்பட பலர் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours