கமல்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 மாணவர்களும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நவராத்திரி தினத்தன்று செட்டிபாளையம் சிவன் ஆலய முன்றலில் ஆலய ஆலோசகர் க. துரைராஜா . தலைமையில் நடைபெற்றது.நவராத்திரி
தினத்தில் கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதிக்குரிய புண்ணிய தினமான தினத்தில்
நடை பெற்ற இச் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் .
மட் /பட் /செட்டிபாளையம் மகா வித்தியாலய பிரதி அதிபர்களான திருமதி. சுதந்தி ஜெயக்குமார் மற்றும் திரு. ஆழகையா கிருபானந்தன் உட்பட
மாணவர்கள்
அவர்களது பெற்றோர்கள், சிவன் ஆலய திருவருள் ஆண்கள் மற்றும் பெண்கள்
சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அடியார்கள், நலன்
விரும்பிகள்,
எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆலய
பிரதம குரு சிவஸ்ரீ பிரணவரூப சர்மா அவர்களின் ஆசியுரையுடன் இந்நிகழ்வானது
ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து திருவருள் சங்கத்தின் ஆலோசகர்
திரு.க. துரைராஜா அவர்களினால் தலைமையுரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்துமட்/
பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு தொடக்கம்
2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில்
பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 29 பாண்டவர்களும்
இம் மாணவர்களை கற்பித்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி யோ.நடேசினி
அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இவ் ஆலயம் உருவாகிய நாளிலிருந்து ஆலய ஸ்தாபகர் சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி அவர்கள் காட்டிய
பாதையில் கல்விப் பணியினையும் சமூகப் பணியினையும் இரு கண்கள் போல் அவரது வழியில் இடையறாது





Post A Comment:
0 comments so far,add yours