(வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு
ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும்
, மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30)
நடைபெற்றது.
அணி
உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா
ஆகியோரின் மணி விழாக் கொண்டாட்டம் மற்றும் புலம் பெயர் உறுப்பினரான
சுவிஸில் வாழும் திருமலை திருமதி விஜயகுமாரி மகேஸ்வரன் 33 வருடங்களின்
பின்னர் சக நண்பர்களை சந்திக்கும் நிகழ்வும் பத்தாவது
ஒன்றுகூடலாக
திருகோணமலையில் நடைபெற்றது.
அணித்
தலைவரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர்
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் திருகோணமலை நிலாவெளி நட்சத்திர
விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு
ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியின் திருகோணமலை தொடக்கம்
திருக்கோவில் வரையிலான புலன அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதல்
நாள் திருகோணமலை நிலாவெளியிலுள்ள இரண்டு நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு
வரை மணிவிழாக் கொண்டாட்டங்கள் மற்றும் சுவிஸ் விஜியின் வருகை சிறப்பாக
நடைபெற்றன.
இரண்டாம் நாள் லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் கடல் பயணத்தை மேற்கொண்டு சோபர்ஸ் தீவில் கொண்டாட்டமும் இடம்பெற்றது.




Post A Comment:
0 comments so far,add yours