சிறிவேல்ராஜ்

தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாரை மாவட்டத்தின் கிட்டங்கி ஊடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது

கல்முனை மற்றும் நாவிதன்வெளிப் பிரதேசங்களை இணைக்கும் இப்போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய தேவைக்காக படகுமூலம் பயணிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கி உள்ளது நீர் பாய்வதுடன் காரைதீவு அம்பாறை பிரதான வீதிக்கு மேலாகவும் நீர் பரவி வருகின்றது  அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மண்டூர் பிரதேசத்திற்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் அச்சத்துடன் அவசரதேவைகளுக்காகப் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது 
 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours