(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கரைவாகுப்பற்று கிழக்குக் கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்குக் கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை (05) சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நலனில் பாரிய நன்மை பயக்கும் இத்திட்டம் பற்றிய முக்கியமான இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அரசிலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான சாய்ந்தமருது மருதூர் கலைமன்ற பொல்லடி குழுவினரின் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்ட இந்நிகழ்வானது துறைசார் அதிதிகள், மேற்படி கண்டங்களின் வட்டவிதானைமார்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்புடன் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது அல் அமான் சமூக நலன்புரி அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.பி.ஏ. ஜப்பாரின் ஏற்பாட்டில், பொருளாளர் அப்துல் ரஹீமின் நெறிப்படுத்தலில், ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எஸ்.எம்.முபாரக், பொதுச்செயலாளர் எஸார் மீராசாஹிப், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவரும் ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவருமான எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி), பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ், மூத்த கல்விமான் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours