நூருல் ஹுதா உமர்



நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக மெளலவி கே.எம். ஜலீல் நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி நேற்று (11) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் தவிசாளராக நியமனம் பெற்றதாக ஏ.அஸ்பர் அவர்களுக்கெதிராக அக்கட்சி மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் வறிதான பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) பிரிவு 66 A (1)(a)இன் பிரகாரம்  மெளலவி கே.எம். ஜலீல் அவர்களை நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதை நிந்தவூர் பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளரான  மௌலவி கே.எம். ஜலீல் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் புதுநகர் வட்டாரத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours