சுமன்)
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.சமூக செயற்பாட்டாளர் வேலாயுதம் பாஸ்கரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, சமூக செயற்பாட்டாளர் வீ.ஆர்.மகேந்திரன் உள்ளிட்ட மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கிரான் பிரதான பாதையூடாக மாவீரர் பெற்றோர்கள் மேள்தாளம் முழங்க அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
மாவீரர் பெற்றோர்களினாலும், வருகை தந்தோராலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி உணர்வுபூர்வமாகவும், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு மதிய போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















Post A Comment:
0 comments so far,add yours