எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் காலநிலை மீள்தகைமை தொடர்பான திட்ட நிகழ்வுநிகழ்வானதுஅக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே. கஜன் தலைமையில் நியூசிலாந்து நாட்டுக்கான Child fund நிறுவன திட்ட முகாமையாளர் மற்பெளல் (Matt Fowler) Chid fund ஸ்ரீலங்கா சிரேஸ்ட முகாமையாளர் ஏ.அர்ச்சுதன்  பங்குபற்றுதலுடன் பாசிக்குடா  அமாய விடுதியில்  (18)  இடம் பெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவினுல் உள்ள அக்குறானை, குடும்பிமலை, முறுத்தானை, பெயரில்லாவெளி போன்ற தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில்  நிலைபேறான நீர் மற்றும் உணவு தொடர்பாகவும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற இயல்பாக்கத்திற்கு ஏற்ற  வகையில் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் புளியடிக்குளம், மாவட்ட வான்குளம், பிறைசூடிக் குளம், சின்ன முறுத்தானை கால்வாய் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 மேலும் சமூதாய மட்ட நீர் வழங்கள் திட்டம் நான்கும், அத்துடன்  முப்பது இளம் விவசாயிகளுக்கான நிவீன முறையிலான விவசாய பயிற்சிகளும், மாதிரி பண்ணைகளுக்கான உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், திருகோணமலை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சுகுணதாஸ், களமுகாமையாளர் கே.சக்திஸ்வரன், நிகழ்சி திட்ட முகாமையாளர் ஞா.சுரேஸ்,  உயர் அதிகாரிகள், சமூக மட்ட உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

AU Lanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours