( வி.ரி. சகாதேவராஜா)
நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாமொன்று இடம் பெற்றது.
மின்
பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான
முகாம் அம்பாறை பொது வைத்தியசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இங்கு 65 க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்கள் இரத்தம் வழங்கினர்.
இந்த
இரத்ததான நிகழ்வில் மின் அத்தியட்சகர்கள், மின்சார சபை ஊழியர்கள் மற்றும்
இங்கினியாகல பொது மக்கள், பல அரச திணைக்கள ஊழியர்களும் கலந்து கொண்டு
இரத்தம் வழங்கினார்கள்.




Post A Comment:
0 comments so far,add yours