கல்லோயாக் குடியேற்றத் திட்டம் (1949 இல் செயற்பாட்டுக்கு வந்தபோது சீமு. இராசமாணிக்கம் ஐயா அவர்களது முயற்சியின் காரணமாக கல்லோயாக் குடியேற்றத்தில் தமிழ்மக்கள் குடியேறுவதற்கான அடித்தளம் இட்டபெருந் தலைவரது புதல்வரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் அன்புத் தந்தையார் இராஜபுத்திரன் ஐயாவின் இழப்பு பேரிழப்பாகும் என போரதீவுப்பற்று பிரதேசசபையின் சின்னவத்தை வட்டார உறுப்பினர் காத்தமுத்து யோகராசா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்புமாவட்டம் பட்டிருப்புதொகுதி மறைந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் மகனும், தற்போதைய இலங்கைத்தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையாருமான Dr. இராஜபுத்திரன் இராசமாணிக்கம்அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
குடியேற்றத் திட்டங்களில் மிகப்பெரியது கல்லோயாத் திட்டமாகும். இது 1948 இற்கும் 1952 இற்கும் இடையில் 120இ000 ஏக்கருக்கும் அதிகமான நீர்ப்பாசனப் பரப்பை உருவாக்கியது சுதந்திர இலங்கையின் மிகப்பெரிய கொலனித்துவக் குடியேற்றங்களில் கல்ஓயா திட்டம் முதன்மையானது இத்திட்டத்திலே தமிழர்களும் உள்வாங்கப்படுவதற்கு முன்னின்றவர் சீமூ.இராசமாணிக்கம் ஐயா அவர்களது புதல்வரது இழப்புபேரிழப்பாகும் அதுமட்டுமல்ல அமரர் இராஜபுத்திரன் அவர்களது புதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்கள் தமிழ் மக்களுக்காக தன்னால் முடிந்தவரை குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றார் அந்தவகையில் தமிழ் தேசியப் பரப்பில் இவரது இழப்பு பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார் அதே வேளை அன்னரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்
அன்னாரது பூதவுடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மறுநாள். 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனக்க்கிரியை இடம்பெறும்..!எனத்தகவல் தெரிவிக்கப்படுகிறது

Post A Comment:
0 comments so far,add yours