சா.நடனசபேசன்


சம்மாந்துறை கல்விவலயத்தில் ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றி தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச்சென்ற கிருஷ்ணப்பிள்ளை அற்புதராசா அவர்களின் சேவையினைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்தின் நாவிதன்வெளிக் கோட்டத்தில் உள்ள  ஆரம்பக்கல்வி ஆசிரியர்களது ஒழுங்கமைப்பில் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலய மண்டபத்தில் ஏற்பாட்டுக்குழுவின் தலைவி ஆசிரியை திருமதி லோகேஸ்வரன் சுதேனுஜா அவர்களின் தலைமையில் 19 ஆம்திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இவர் விவேகானந்தா மகாவித்தியாலயம் மற்றும் வேப்பையடிகலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக 22 வருடங்கள் கடமையாற்றி 2014 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரிய ஆலாசகராகக் கடமையாற்றிய நிலையில் தனது 33 வருடக் கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.வை.அறபாத் மொகைட்டீன், பி.பரமதயாளன் ,எச். நைறோஸ்கான் மற்றும் விசேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான  ஏ.எம்.ரிஸ்வி, ஏ.எம்.கியாஸ், விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் கே.ஜெகதீசன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது ஆசிரிய ஆலோசகர் கே.அற்புதராசா அவர்களது சேவையினைப்பாராட்டி நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துப்பா என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours