எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு இயந்திர படகு வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் அதிகளவு வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படும் பிரதேசமான
கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே. கஜன் தலைமையில் நியூசிலாந்து நாட்டுக்கான Child fund நிறுவன திட்ட முகாமையாளர் மற்பெளல் (Matt Fowler) ஆகியோரினால்  மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அம்மனியிடம் இயந்திர படகு  மற்றும் உயிர்பாதுகாப்பு மிதவை மேலங்கிகள்  கோரகல்லிமடு பிரதேச செயலாளர் விடுதியில் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டன.

வெள்ள நீர் பாதிப்பினால் இப்பிரதேச மக்களின் தரைவழி தொடர்பு தூண்டிக்கப்படுகின்றமையினால் நகர் பிரதேசத்திற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு இவ் இயந்திர படகுகள் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோஜினி,  திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சிவநேசராஜா, Chid fund ஸ்ரீலங்கா சிரேஸ்ட முகாமையாளர் ஏ.அர்ச்சுதன், களமுகாமையாளர் கே.சக்திஸ்வரன், நிகழ்சி திட்ட முகாமையாளர் ஞா.சுரேஸ்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours