மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தண்ணீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றத்தினால் (2025.11.20) ரூபா 500,000/= தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன், கூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராகவும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் வாழைச்சேனை நீதிமன்றில் விதிக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் என். எம் சப்ராஸ் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours