பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலய வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா துர்க்கா அறக்கட்டளை சுவிஸ்அமைப்பின்  அனுசரணையில்  8 ஆம்திகதி சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் திரு ச. டில்லி நாதன் அவர்களின் தலைமையில் துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலய  மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

இதே வேளை பவர் காட் பிளான்டேசன் அமைப்பின் முகாமையாளர் பி.பிரதீபன் அவர்களது நிதி உதவி மூலம் பாடசாலைக்காக புதிதாக அமைக்கப்பட்ட மேடையினை திரைநீக்கம் செய்யப்பட்டது

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பு.திவிதரன் சிறப்பதிதிகளாக கிராமத்தில் இருந்து கல்வி நிருவாகசேவைக்கு அண்மையில் தெரிவான சோ.செல்வம் கல்முனை கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் துர்க்கா அறக்கட்டளை சுவிஸ் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் த.ரவிச்சந்திரன்  விசேட அதிதிகளாக பவர் காட் பிளான்டேசன் அமைப்பின் முகாமையாளர் பி.பிரதீபன் பட்டிருப்பு கல்விவலயத்தின் ஆசிரிய ஆலோசகர் பி.ஜமுனாகரன் துறைநீலாவணை பிரதேசவைத்தியசாலை வைத்தியர் எல்.நிலுக்ஷன் துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலை அதிபர் ஆ.மதியழகன்  உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்






















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours