(எஸ்.அஷ்ரப்கான்)
 
போதைப் பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு கல்முனை ஹுதா பள்ளிவாசல் ஏற்பாட்டில் தஃவா குழுவின் பங்குபற்றுதலுடன் (07) பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்றாஹீம் தலைமையில் பேஷ் இமாம் மெளலவி சாபித் (ஷரயி, ரியாதி) அவர்களின் வழி நடாத்தலில் இடம்பெற்றது.

அதிதியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி , கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான   ஏ.எல்.ஏ வாஹிட், கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் என்.எம் அஷ்ரப், பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.வி.எம்.தன்சீல், பள்ளிவாசல் பிரதி நிர்வாக செயலாளர் எம்.ஐ.சமாயின் ஆகியோருடன்  உலமாக்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், தஃவா குழு உறுப்பினர்கள் பொது மக்களும்  கலந்து கொண்டனர்.

இதன் போது,  மெளலவி அதிதிகளின் போதைப்பொருள் சம்பந்தமான உரைகள் இடம்பெற்றதுடன் இறுதியாக போதைப்பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாணமும் நடைபெற்றது.

இதன்போது அங்கு ஒன்று கூடியிருந்த மக்கள் அனைவரும்  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உண்மைக்குண்மையான குடிமகனாகிய நான் போதைப்பொருள் பாவனை, விற்பனை, கடத்தல் போன்ற எந்த வகையான குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்றும், போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எச் சந்தர்ப்பத்திலும் துணை நிற்க மாட்டேன் என்றும், பாவனையாளர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்களை அரசுக்கு அடையாளப்படுத்தி எம் நாட்டில் நிலைகொண்டுள்ள மிக மோசமான போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும், எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்ந்திடவும் என்னாலான முயற்சிகளை முழுமையாக முன்னெடுப்பேன் என்றும் இப்பணியில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும். பாதுகாப்புத் துறையினர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் இச்சந்தர்ப்பத்தில் இறைவன் சாட்சியாக உறுதிமொழி வழங்கி சத்தியப்பிரமாணம்  செய்து கொண்டுள்ளனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours