தர்மா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த தேசிய வேலை திட்டத்துக்கு  அமைவாக காரைதீவு பிரதேச கலாசார விழா கடந்த செவ்வாய்க்கிழமை காலை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக பிரிவுக்கான கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் முன்னெடுப்பில் பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணனை பிரதம விருந்தினராக கொண்டு நடத்தப்பட்ட விழாவில் 
 மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஆர். சஜிந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு பரிசில்கள் , சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours