( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில்
ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான
புகையிரத பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு
வருகிறது.
அண்மையில்
ஏற்பட்ட பேரிடர் காலத்தில் இருந்து கொழும்பு - மட்டக்களப்பு புகையிரத
சேவை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது . அதாவது புகையிரத சேவை
நடைபெறவில்லை.
மீண்டும் புகையிரத சேவையை மீள ஈடுபடுத்துவதற்காக ரயில் பாதைகள் ஆங்காங்கே திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மன்னம்பிட்டியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரயில் பாதைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன .
அங்கு இன்று கனரக இயந்திரம் மூலம் இரவு பகலாக தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையில் அப்பாதைகள் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .



Post A Comment:
0 comments so far,add yours