ஸ்ரீ வேல் ராஜ்

இலங்கை மின்சார சபையின், 132kV உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற கோபுரம் மற்றும் மின் கம்பிகள் வெள்ளத்தால் சேதமடைந்ததால், அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை, சிரமங்களுக்கு மத்தியில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சேதமடைந்த மின் பரிமாற்ற பாதையை சரிசெய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்துள்ளது எனவும்

தற்போது அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் அத்தியாவசிய நிறுவனங்களுக்கான மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சில பகுதிகளுக்கு தற்காலிகமாக சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுகிறதுஇருப்பினும், சில பகுதிகளில் தொடர்ந்து முழுமையான மின் தடை நிலவுகிறது எனவும் தெரிவித்துள்ள மின்சார சபையினர்

சேதமடைந்த கோபுரத்திற்குப் பதிலாக புதிய கோபுரம் ஒன்றின் கட்டுமானம் துரித கதியில் நடைபெற்று வருகிறது எனவும் இந்த பணிகளை நிறைவுசெய்து, அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளுக்கான மின் விநியோகத்தை ஒரு வார காலத்தினுள் முழுமையாக சீர்செய்ய எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

அத்துடன்இந்த அவசர கால நிலையில் மக் களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு  மன்னிப்பையும், கோரியுள்ளது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours