சுதாகரன்


கடந்த காலத்தில் வடக்கு கிழக்கை அபகரித்த ,தந்திரோபாய செயற்பாடுகள் இனியும் நடைபெறக் கூடாது 

மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்

கடந்த கால அரசாங்கங்கள் தந்திரோயாய செயற்பாடுகளைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களை அபகரித்து சிங்கள மயப்படுத்தி வந்தன. 

விவசாயக் குடியேற்றங்கள், தொல்லியல் பாதுகாப்பு,மகாவலி அபிவிருத்தி, வனக்காணிகளை எல்லையிடல்,தேசிய பாதுகாப்பு போன்ற செயற்பாடுகள் மூலமாக வடக்கு கிழக்கு காணிகள் கடந்தகால அரசாங்கங்களால் அபகரிக்கப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணங்களின் நில அபகரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கும் போது

திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு,வவுனியா போன்ற மாவட்டங்கள் அதிகளவில் அபகரிக்கபட்டுள்ளன. 

அப்படியான  கடந்தகாலச் செயல்கள் இந்த அரசாங்கக்தாலும் தொடரக்கூடாது. தொடர்ந்தால், கடந்த அரசாங்கங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது. தொல்லியல் பொருள் தேடல் தமிழருக்குத் தொல்லைகள் தருவதாக அமையக்கூடாது. கடந்த காலப் படிப்பினை என்னவென்றால், தொல்லியல் தேடல் என்பது, பௌத்த இருப்புக்கான தேடலாகவும், பௌத்த நிறுவுதலுக்கான தேடலாகவும் அமைந்ததன. 

குருந்தூர் மலை,வெடுக்கு நாறிமலை,வடமுனை நெடிய கல்மலை, மாணிக்கமடு போன்ற அனைத்தும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கான நடவடிக்கைகளாளாகவவே அமைந்தனை. இதனால் இன நல்லிணக்கம் குழப்பப்பட்டன.பௌத்த மேலாதிக்கம் தமிழ் மண்ணில் திணிக்கப்பட்டன. அவ்வழியை இப்போதைய தொல்லியல் ஆணைக்குழு செய்யப் போகின்றதா? என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திடமே உள்ளது. பொலிஸ் பலம்,படைப் பலம் என்பவற்றை முன் நகர்த்தி வடக்கு கிழக்கில் பௌத்தத்தை திணிக்க முற்படுவதைத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 

பழைமைவாதம், பிற்போக்குவாதத்தால் இந்த நாடு சிதைக்கப்பட் டுள்ளது என்பதை வரலாறு கூறுகின்றது. இதனை இனியும் கற்றுக்கொள்ளாது விட்டால்இ இந்த நாட்டுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும். 

அன்பேயுருவான புத்தர் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்கான நடுகல்லாக அல்லது குறியீடாகப் பயன்படுத்தக் கூடாது. இதனை ஞானசாரர தேரர், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆகியோர் செய்து வந்துள்ளனர். என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இன மத அடிப்படைவாதிகள் நாட்டை அழிக்கும் கருவிகளாக உள்ளனர் என்பதை பொறுப்புள்ள தலைவர்கள் உணர்ந்து தடுத்த வேண்டும் என்பதை பொறுப்புடன் கூறி வைக்கின்றேன்.எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours