சுதாகரன்

 எமது நாட்டில் மண்சரிவுகளால் மக்களின் உயிர் பறிக்கப்படுவது தொடர்கதையாகவுள்ளது.மரணப் பொறிகளாக மண்சாய்வு நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்
பருவ மழை காலங்களில் மலையக மண்சாய்வு நிலங்கள் தினமும் மரண பயத்தைக்கொடுக்கின்றன.நாட்டுக்காக உழைக்கும் மலையகத் தொழிலாளர்களும், உறவுகளும் மரணப்படுக்கையில் மனைகளைக் கொண்டிருக்கின்றனர். இதனால் வரலாற்றில் பல நூற்றுக்களுக்கான உயிர்களைப் பலி கொடுத்துள்ளனர். நிம்மதியாக, நிரந்தரமாக வாழ முடியாத நிலையில் அவர்கள் பரிதவிக்கின்றனர். 

கடந்த  நவம்பர் 28,29,30 களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் 627 இற்கு மேற்பட்ட மலையக உறவுகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. 190  இற்கும் மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்காய் உழைக்கும் எமது மக்களின் இடரில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் தார்மிக கடமையாகும். இனிவரும் காலத்திலாவாது மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

 அவர்களுக்குப் பாதுகாப்பான மனைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இலங்கையரசு, இந்தியரசு இரண்டும் அதி கூடுதலான  அக்கயையினைக் காட்ட வேண்டும்.எல்லா வளங்களிலும் பெறுமதியான வளம் மனிதவளம் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும். 

மனிதவளத்தை மதித்த நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.  மதியாத நாடுகள் இன்றும் வளர்ச்சி அடையவில்லை. இலங்கையின் 76 ஆண்டுகள் வரலாறு இன்னும் தொடரக் கூடாது.இதற்கான மாற்று வழியைப் புதிய அரசாங்கம் நாட வேண்டும்.மாற்றம் இல்லையென்றால், நாடு ஏற்றம் அடையாது.எனத்தெரிவித்தார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours