( காரைதீவு  சகா)

சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும்
  மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் , 
இணைந்த கரங்கள் அமைப்பினால் நேற்று (29) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு  பாடசாலையின் அதிபர்.  கே.தியாகராஜா தலைமையில்  நேற்று  இடம்பெற்றது.

 "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  அவுஸ்திரேலியா இணைந்த கரங்கள் அமைப்பானது வடக்கு கிழக்கில் வசதி குறைந்த பல பாடசாலைகளில் மாணவர்களுக்கான 
விசேட மேலதிக வகுப்புகளை இலவசமாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணிதபாட விசேட வகுப்புகள் நேற்று திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இணைந்த கரங்கள் அமைப்பின் வேண்டுகோளின் பெயரில்,  சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வகுப்பை ஆரம்பித்து வைத்தார்.

பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.

இணைந்த கரங்கள் அமைப்பின் சார்பில் இணைப்பாளர் 
காந்தன் கலந்து சிறப்பித்தார்.

சிரேஸ்ட ஆசிரியர் எஸ்.நடனசபேசன் நெறிப்படுத்திய இந் நிகழ்வில் கணித பாட ஆசிரியர் ஏஸ். லோஜிதனும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours