இ.சுதாகரன்
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் கழக அங்கத்தவர்கள் தலைமைத்துவம் மற்றும் திறன் விருத்தியினையும் மேம்படச் செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி பட்டறை முகாம் போரதீவு பற்று பிரதேசசெயலக வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில் இளைஞர் உத்தியோகத்தர் எஸ்.வித்தியன் அவர்களின் ஒருங்கிணைப்புஇவழிகாட்டலின் கீழ் நேற்றைய தினம் திங்கட்கிழமை{22)காலை நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் மற்றும் போரதீவு பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் மற்றும் வளவாளர்கள்இ இளைஞர் கழக பதவி நிலை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் பங்கு பற்றிய இளைஞர்இ யுவதிகளுக்கு பெறுமதி மிக்க சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours