(கனகராசா சரவணன்)





முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம்; உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன் அந்த பகுதியில் மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர், அவரது மனைவியான 73 வயதுடைய மேரி ஜெர்மைன் என்ற இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதியவரான பெண்  தாயார்  தீராத நோய் காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையில் இருந்து வரும் அவரைப் பராமரித்து வருகின்ற நிலையில் தந்தையார் சம்பவ தினமான இன்று இரவு 6.00 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் அதன் பின்னர் மகள் அறையில் இறந்துள்ள நிலையில் தந்தையார் தான் விஷம் உட்கொண்டவுடன் தாயாருக்கும் விஷத்தை கொடுத்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை கடந்த 12 நாட்களுக்குள்  6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours