எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் ஊரும் உறவும் பொங்கல் விழாவும் சுவிஸ் உதயம் அமைப்பின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் நாட்டின் Treffpunkt wittig kofen jupiters trasse 15 ,3015 B 15 இல் நடைபெறவுள்ளதுஇவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்ற இருப்பதுடன் சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட இருக்கின்றது.



Post A Comment:
0 comments so far,add yours