(சுமன்)

 

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் செயற்றிட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில், களுதாவளை, களுவாஞ்சிக்குடி, காக்காச்சிவட்டை, கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில்​ தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை தென் எருவில்பற்று உப தவிசாளர் அ.வசீகரன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும், அமைப்பின் உப தலைவருமான த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.நாகேந்திரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் வரதராசா, தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours